Gavitha / 2015 ஜூன் 23 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில், புத்தளம் சாஹிரா இளைஞர் கழக அணி 111 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையோடு இளைஞர் சம்மேளனத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் இந்த மெய் வல்லுனர் போட்டிகள், இவ்வருடம் புத்தளம் இந்து மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) முழு நாளும் இடம்பெற்றது.
புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 05 இளைஞர் கழகங்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றன. 100,200,1,500 மீட்டர் ஓட்டப்போட்டிகள், அஞ்சல் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், பரிதி வட்டம் வீசுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல போட்டிகளும் இடம்பெற்றன.
நடைபெற்ற போட்டிகளின் பிரகாரம் 113 புள்ளிகளை பெற்று புத்தளம் ஆனந்தா இளைஞர் கழகம் முதலாம் இடத்தினையும் புத்தளம் சாஹிரா இளைஞர் கழகம் 111 புள்ளிகளையும் பெற்று இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago