2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்டப் போட்டி இடைநடுவில் நிறுத்தம்

George   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாவட்டங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியில், மன்னார் வீரர் ஒருவர் தன்னை எதிரணி இரசிகர்கள் தாக்கியுள்ளனர் எனக்கூறியதுடன், அவ்வணியின் வீரர்கள் தொடர்ந்து விளையாட மறுத்ததால், போட்டி இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

மாவட்டங்களுக்கிடையிலான இந்தப் போட்டியின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (21) காலை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது யாழ்ப்பாண - மன்னார் மாவட்ட அணிகள் மோதின.

முதற்பாதியாட்டத்தில், மன்னார் அணி அடுத்தடுத்து 2 கோல்களைப் போட்டு போட்டியில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியாட்டத்தில் ஆக்கிரோஷமாக ஆடிய யாழ்ப்பாண அணி, அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டது.

இரண்டாவது கோல் போடப்பட்டதும் யாழ்ப்பாண இரசிகர்கள், தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மைதானத்துக்குள் இறங்கி ஆரவாரப்பட்டனர். இரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேறியதும், மன்னார் முன்கள வீரர் ஒருவர் தான் தாக்கப்பட்டதாகக்கூறி மைதானத்துக்குள் வீழ்ந்து கிடந்தார்.

இதனையடுத்து, போட்டி நிறுத்தப்பட்டு ஏற்பாட்டாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். தங்களால் பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து விளையாட முடியாது எனக்கூறிய மன்னார் அணியினர், போட்டியில் தொடர்ந்து விளையாட முன்வரவில்லை. இதனால் போட்டி கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .