R.Tharaniya / 2025 நவம்பர் 23 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆஸ்திரேலிய ஓபன் பெட்மீட்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் பட்டம் வென்றார். மிகவும் கடினமான இந்த சீசனில், லக்ஷயா சென் தனது முதல் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற சூப்பா் 500 இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரா் யுஷு டனகாவுடன் இந்தியாவின் லக்ஷயா சென் மோதினார்.
இந்தப் போட்டியில், லக்ஷயா சென் 38 நிமிஷங்களில் 21-15, 21-11 என இரண்டு கேம்களிலும் அசத்தலாக வென்று தனது வெற்றியை கொண்டாடினார்.
இதன்மூலம் இந்த சீசனில் தனது முதல் பட்டத்தை லக்ஷயா சென் பெற்றுள்ளார். இந்த சீசனில் பலமுறை அரையிறுதி போட்டிவரை வந்து பட்டத்தை இழந்துவந்த லக்ஷயா சென்னுக்கு இந்தப் பட்டம் மிகுந்த ஆசுவாசத்தை அளித்துள்ளது.
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago