Mithuna / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 439 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் இலங்கை பெற்றுள்ளது.
இலங்கை சார்பாக அஞ்சலோ மத்தியூஸ் 141, தினேஷ் சந்திமால் 107, திமுத் கருணாரத்ன 77, நிஷான் மதுஷ்க 37, சதீர சமரவிக்கிரம 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நவீட் ஸட்ரான் 4, நுஜாட் மசூட், கேய்ஸ் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ரஹ்மத் ஷா 91, நூர் அலி ஸட்ரான் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் விஷ்வ பெர்ணாண்டோ 4, அசித பெர்ணாண்டோ, பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026