2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

உயர் தரத்தில் 3A சித்திகளை பெற்ற யாழ். மாணவன் திடீர் மரணம்

Freelancer   / 2026 ஏப்ரல் 04 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தெற்கு இணுவிலைப் பகுதியைச் சேர்ந்த லவன் அக்சயன் என்பவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று(04) உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கணிப் பிரிவில் 2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்திருந்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தினார்.

குறித்த இளைஞனுக்கு ஏற்பட்ட நோய் நிலைமை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவர் கூறினார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .