2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

49 ஆவது விளையாட்டு விழா

R.Tharaniya   / 2025 மே 04 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 49 வது பிரதேச மட்ட விளையாட்டு விழா அண்மையில் முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

குறித்த பிரதேச மட்ட போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு பதிவு செய்யப்பட்ட 43 விளையாட்டு கழகங்கள் பங்குபற்றின. 

இதில் சிறு விளையாட்டுக்கள் மற்றும் பெரு விளையாட்டுக்கள் என இடம் பெற்ற நிலையில்மேலும் கிரிக்கெட், எல்லை,கபடி,கரப் பந்து மற்றும் மெய்வல்லுனர் ஆகிய போட்டிகள் இடம் பெற்றன.

இறுதிப் போட்டிக்கு அரபா கழகமும் ஈச் கழகமும் தெரிவாகியதுடன் ஒட்டு மொத்த சம்பியனாகவும் தெரிவாகியது.  குறித்த போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் கேடயங்களும் இறுதி போட்டி நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த போட்டியில் வெற்றியீட்டியவர்கள் மாவட்ட மட்டங்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர் இவர்களுக்கான விளையாட்டு பயிற்சிகளை தம்பலகாமம் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம்.ஹாரிஸ் திறம்பட வழங்கி வருகின்றார்.

இறுதி போட்டிக்கு பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி மற்றும் கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வடகிழக்கு உதவிப் பணிப்பாளர் ஸ்ரீபதி மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விமலசேன உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எச் ஹஸ்பர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .