Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (04) பதிவாகியுள்ளது
மதுரங்குளி - வேல்சுமனபுர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதய சனத் பத்திராஜா (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மதுபானம் அருந்தும் பழக்கமுடைய குறித்த நபர், இதற்கு முன்னரும் ஒரு சில தடவைகள் இவ்வாறு தன்னுயிரை மாய்ப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற குறித்த நபர், மீண்டும் வந்து தன்னுயிரை மாய்த்துக்கொள்வதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத மனைவி, உறவினரின் வீட்டுக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கணவன் வீட்டு வாசலில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago