Janu / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் வியாழக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு படகுகளில் வருகை தந்த இந்திய மீனவர்கள் கற்பிட்டி வடக்கே குதிரமலைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த நான்கு விசைப் படகுகளும், மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மீன்பிடி உள்ளிட்ட சில உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பிரதேச கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
ரஸீன் ரஸ்மின்

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago