2025 மே 07, புதன்கிழமை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஊடகம் மற்றும் சட்டத்தின் வகிபாகம்

Editorial   / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பத்திரிகையாளர் சங்கம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட கருத்தரங்கு ‘இலங்கை ஜனாதிபதி தேர்தலில்  ஊடகம் மற்றும் சட்டத்தின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மண்டபத்தில், ஆகஸ்ட் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை   நடைபெற்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், கருத்துரை வழங்கினார்.

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் குருலு கூஞ்சன காரியவண்ண, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி சத்துர கல்ஹேன, இலங்கை பத்திரிகையாளர் சங்கம்  செயலாளர் நாயகம் திலக் சேனாநாயக்க, சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சந்துன் யாப்பா கருணாரத்ன மற்றும்  நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி லக்மால் சூரியகொட ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X