Janu / 2025 ஜூன் 10 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடிய எட்டு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுடன் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய எட்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மஹரகம நகரில் போதைப்பொருளுடன் ஒருவர் சுற்றித் திரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதையடுத்து, பெறப்பட்ட 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், முச்சக்கர வண்டி திருட்டு கும்பல் தொடர்பாக தெரியவந்துள்ளது.
குறித்த கும்பலின் பிரதான சந்தேக நபர் தற்காலிகமாக வசித்து வரும் வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன்படி மேற்கொண்ட மேலதிக விசாரணையில், முச்சக்கர வண்டிகள் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளன.
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago