Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஜூன் 05 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐயப்ப பக்தர்களுக்காக எடுக்கவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமான கலந்துரையாடல் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்த குமாரின் வேண்டுகோளுக்கிணங்க யாத்திரை மேற்கொள்ளும் சுவாமிமார்கள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் புதன்கிழமை (04) இடம் பெற்றது.
இலங்கை ஐயப்ப பக்தர்கள் இந்திய நோக்கிய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், யாத்திரையினை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நேரடி வழிகாட்டல் மூலம் அவர்களுடைய முழுமையான கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சாமிமார்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகள் சம்பந்தமாகவும் விசா தொடர்பான கட்டண பிரச்சினைகள், விமான டிக்கெட்டுகள் மற்றும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அடுத்த கட்டமாக புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
6 hours ago
7 hours ago