Mayu / 2024 ஜனவரி 30 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராமநாதபுரம் பாம்பன் குந்துகால் கடற்கரையிலிருந்து நாட்டிற்கு கடத்த முயன்ற ஏலக்காய், மண்டபம் மெரைன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை(29) நள்ளிரவு மன்னார் வளைகுடா கடல் வழியாக படகொன்றில் நாட்டிற்கு ஏலக்காய் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது படகில் இருந்த மூவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூடையை சோதனை செய்தபோது அதில் 43 கிலோ ஏலக்காய் இருந்துள்ளதோடு
கைபற்றப்பட்ட ஏலக்காய் மூடை இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஏலக்காய் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும் இந்த மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லம்பர்ட் ரொசேரியன்
19 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago