Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Janu / 2024 நவம்பர் 06 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்கம அஸ்வத்த தும்மோதர ஓடையூடாக பயணித்த கெப் வண்டியொன்று வெள்ளத்தில் சிக்கி அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கெப் வண்டி மாணக்கடர - முகெவத்த வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஓடையை கடந்து செல்ல முற்பட்ட நிலையில் கெப் வண்டி வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கிரிபத்கொட அசோக உயன பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய லொகு லியனகே வண்ண கப்ரால் மற்றும் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பி. தசுன் பெர்னாண்டோ ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் .
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .