2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காதலியை அழைத்த காதலன் கைது

Mayu   / 2024 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பிரதேசத்தின் சட்டப்பூர்வ பாதுகாப்பில் இருந்து பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவரை வெல்லவாய பொலிஸார் வியாழக்கிழமை (08) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய உல்கந்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த அவர், பாடசாலைக்கு செல்லும் வழியில் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

சம்பவத்தின்போது மாணவி தங்கள் வீட்டிற்கு வந்ததை அறிந்த இளைஞரின் பெற்றோர் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதற்கமைய,அவர் தனது காதலனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X