Mayu / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயின்று வரும் சிறுமியை, அவளுடைய மைத்துனர் வன்புணர்ந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒக்கம்பிட்டிய புரத்தகொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை அடுத்து சிறுமியின் மூத்த சகோதரியின் கணவன் (மச்சான்), சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி சிறிய வயதாக இருக்கும்போது சிறுமியின் தந்தை மரணமடைந்துவிட்டார். இந்நிலையில், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் அச்சிறுமியின் தாய், மூத்த சகோதரியின் வீட்டில் வசிக்கின்றனர்.
2ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் சென்று திரும்பிய சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது மூத்த சகோதரி வீட்டில் இருக்கவில்லை.
இதனை பயன்படுத்தி அச்சிறுமியை அறைக்குள் இழுத்துச் சென்று வன்புணர்ந்து உள்ளார்.
தனக்கு நேர்ந்ததை அச்சிறுமி, தன்னுடைய மாமியிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், 23 வயதான சந்தேக நபர், தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சுமணசிறி குணதிலக்க
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago