Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தலை மாவிட்டர கனத்த வீதியிலுள்ள வீடொன்றில் பட்டாசு உற்பத்தியில் ஈடுப்பட்டிருந்த நபரொருவரும், அவரது இரு பிள்ளைகளும் இன்று (31) காலை ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட தளபாடங்கள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ் வீட்டில் ஏனைய பட்டாசுகள் தொடர்பான பொருட்கள் தயாரிக்கப்படுவதுடன் இன்று (31) காலை 07 மணியளவில் பட்டாசுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தீடிரென தீப்பரவியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
32 minute ago
50 minute ago