2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

போலி ஆவணங்களுடன் ஸ்பா பெண் உட்பட மூவர் கைது

Janu   / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலஸ்கமுவவில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் இருந்து கைது செய்யப்பட்ட பெண்ணின் வசம் இருந்த போலி அடையாள அட்டை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, வெலிக்கடையில் உள்ள ஒரு ஆடம்பரமான நான்கு மாடி வீட்டின் உரிமையாளர், மற்றொரு நபருடன் இணைந்து  நடத்தி வந்த போலி அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை தயாரிப்பு தொடர்பாக தெரியவந்ததாக  நுகேகொடை  குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்களிடமிருந்து  ஒரு கணினி, ஒரு அச்சுப்பொறி, ஒரு லேமினேட்டிங் இயந்திரம், போலி தேசிய அடையாள அட்டைகள், போலி வருமான அனுமதி பத்திரங்கள், வெளிநாட்டு விசாக்களின் நகல்கள், கல்விச் சான்றிதழ்கள், பாடநெறி சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு போலிச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுகேகொடை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .