Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - கற்பிட்டி வடக்கு எல்லை , குதிரமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று டிங்கி இயந்திர படகுகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் வெள்ளிக்கிழமை (09) அன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று டிங்கி இயந்திர படகுகள் சோதனைக்குற்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த மூன்று டிங்கி இயந்திர படகுகளிலும் 62 உர மூட்டைகளில் அடைக்கப்பட்ட 2068 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பெயரில் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 20 - 37 வயதுக்கு இடைப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் மூன்று டிங்கி இயந்திர படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
ரஸீன் ரஸ்மின்
7 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
2 hours ago