2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பீடி இலைகள் மீட்பு

Janu   / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - எரம்புகொட களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றிலிருந்து ஒருதொகை பீடி இலைகள் வியாழக்கிழமை (08) அன்று கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை சோதனைக்குற்படுத்திய போது அதில் இருந்து 21 உர மூட்டைகளில்  அடைக்கப்பட்ட 689 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பெயரில் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், பீடி இலைகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி இயந்திர படகு ஒன்றும், பீடி இலைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் லொறியும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்டவை சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X