Janu / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்மலானை , பொருப்பன பிரதேசத்தில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூன்று பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர் .
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், அவரது மனைவியான கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் மற்றும் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய விசேட பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளுமே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு கான்ஸ்டபிள் அவரது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய விசேட பணியக கான்ஸ்டபிள், பிலியந்தலை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது .
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago