Janu / 2024 ஜனவரி 22 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி - தோரண சந்தி பகுதியில் குடிபோதையில் காரை செலுத்தி இரண்டு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்படுத்தி தப்பிச்சென்ற சாரதி உட்பட நால்வரை ஞாயிற்றுக்கிழமை (21) வத்தளை-ஹெக்கிட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சாரதி உட்பட நண்பர்கள் நால்வரும் திருமண வைபவமொன்றில் கலந்துகொண்டு மதுபோதையில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது கொழும்பு – கண்டி தோரண சந்தியில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
19 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago