Mayu / 2024 ஜூலை 10 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிகேஜி கபில
மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்ரியாவின் வியன்னாவிற்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞன் ஒருவரை செவ்வாய்க்கிழமை 09 இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வசிக்கும் 39 வயதுடைய இளைஞராவார்.

இவர் செவ்வாய்க்கிழமை (09) அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் ஏ.ஐ. - 282 விமானம் இந்தியாவின் புதுடெல்லி சென்று அங்கிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரகர் ஒருவரிடம் 90 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு ஆஸ்திரிய கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சூட்கேஸில் இருந்த உண்மையான கடவுச்சீட்டு மற்றும் போலி குடியேற்ற முத்திரையை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவரை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago