2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

மனைவியுடன் வாக்குவாதம்: மரத்தில் தொங்கினார் கணவன்

Mayu   / 2024 மே 06 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - ஆண்டிகம் பகுதியில் 25 அடி உயர மரத்தில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆண்டிகம, மயில்லாவெவ பகுதியைச் சேர்ந்த மனன்னலாகே பிலேமசிறி ( வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார் என  பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக  வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மயில்லாவெவ பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகிலுள்ள 25 அடி உயரம் கொண்ட மரத்தின் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மஹகும்புக்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X