Janu / 2025 ஜனவரி 26 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் லுணுஓயா பாலத்திற்கு அருகில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மீது புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த கார் ஒன்று மோதிய நிலையில் தூக்கி வீசப்பட்டு, எதிரே பயணித்த மற்றுமொரு காருடனும் மோதி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த நபரை உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் இரண்டு கார்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
7 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago