Janu / 2025 மே 08 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் வியாழக்கிழமை (08) காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை- பதுளை தனியார் பேருந்தொன்று குறித்த வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தின் போது பேருந்தில் பயணித்த நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026