Mayu / 2024 ஜூன் 06 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பெருந்தொகை விவசாய இரசாயன பொருட்கள் கற்பிட்டி , ஏத்தாளை பகுதியில் வைத்து புதன்கிழமை (5) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் ஏத்தாளை எரம்புகொடல்ல கடல் பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, இந்தியாவில் இருந்து இயந்திரப் படகு மூலம் கற்பிட்டி , ஏத்தாளை கடற்பிரதேசத்தில் இறக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யும் நோக்கில் எடுத்துச் செல்ல முற்பட்ட போதே மேற்படி விவசாய இரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது, 31 மூடைகளில் அடைக்கப்பட்ட இரசாயன மருந்துகள், கிருமிநாசினிகள், களை நாசினிகள் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இரசாயன உர வகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்ற விவசாய இரசாயன பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்திருப்பதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



17 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago