Mayu / 2024 ஜனவரி 08 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று மாணவியை தாக்கி, கூட்டு வன்புணர்வு செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கடந்த 5ஆம் திகதி மாணவியை ஆரையம்பதி பகுதிக்கு கடத்திச் சென்று அங்கு அவரை தாக்கி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 26-32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் இன்றையதினம் (8) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago