R.Tharaniya / 2025 ஜூன் 09 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025ம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் சவுதி அரேபிய அரசாங்கம் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு கொழும்பு அல் ஹிக்மா நிறுவனம் பணிப்பாளர் எம்.எச்.ஷேஹுத்தீன் மதனி (BA) பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய மன்னர், இரு புனிதஸ்தலங்களின் காவலர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் மற்றும் உள்விவகார அமைச்சர் அமீர் அப்துல் அஸீஸ் பின் நாயிப் மற்றும் அனைத்து சவுதி அரேபிய உயரதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சுமார் இரண்டு மில்லியன் மக்களை ஒரே இடத்தில் குறிப்பிட்ட ஓரிரு தினங்களில் ஒன்று சேர்ப்பதும், அவர்களுடைய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதும், குறிப்பாக நிம்மதியாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் மற்றும் மருத்துவம் உட்பட அனைத்து உட்கட்டமைப்புகளையும் அதிநவீன முறையில் செய்து கொடுப்பதும் இலகுவான காரியமல்ல.
இதற்கான அனைத்து திட்டங்களையும் நிர்வாக செயற்பாடுகளையும் சவுதி அரேபிய அரசு அதிகாரிகள் சென்ற வருட ஹஜ் முடிந்ததில் இருந்தே ஆரம்பித்து விடுகின்றனர். இது உலக மக்கள் அனைவரதும் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வது எமக்கு மிகப் பெரும் கண்ணியம் கெளரவம் என்ற சின்னம் சவுதி அரேபிய மன்னர்கள் உட்பட அந்நாட்டு சிறுவர்கள் உட்பட அனைத்து பிரஜைகளினதும் ஆழ் மனதில் அன்று தொட்டு இன்று வரை பதிந்த ஒன்று என்பதால் அரசன் உட்பட அனைவரும் ஹாஜிகளுக்கு சேவகர்களாகவே உள்ளனர்.
உண்மையில் இது எமக்கு பெருமையளிக்கிறது. ஒவ்வொரு ஹாஜிகளும் இதை நன்குணர்ந்து சவுதி அரேபிய அரசுக்கு நன்றியும் செலுத்துகின்றனர்.
2025 ஹஜ் வெற்றிகரமாக முடிந்ததையிட்டு சவுதி அரேபிய மன்னர் மற்றும் இளவரசர் உள்விவகார அமைச்சர் அனைவருக்கும் சவுதி அரசுக்கும் உலக இஸ்லாமிய நாட்டுத் தலைவர்கள், உலமாக்கள், நலன்புரி அமைப்புகள் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் விஷேடமாக தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியா அரசாங்கம் இவ்வருடம் ஹஜ்ஜை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கும் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் உட்பட அனைத்து ஹஜ் யாத்திரிகர்களுக்கும் பாதுகாப்பான அடைக்கலம் அளித்தமைக்கும் அனைவரும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளனர்.
இரண்டு மில்லியன் ஹாஜிகளும் சிறப்பாக தங்களது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு அவரவர் நாடுகளுக்கு நிம்மதியாக திரும்பிச் செல்ல இவ்வாறான அளப்பரிய சோவைகளைச் செய்து கொடுத்து 2025 ஹஜ்ஜை வெற்றிகரமாக நிறைவு செய்த சவுதி அரேபிய மன்னர், இளவரசர், உள்விவகார அமைச்சர் மற்றும் சவுதி அரசுக்கும் மீண்டும் என் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago