Suganthini Ratnam / 2016 ஜூலை 29 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய மக்கள் இசை விழா நேற்று வியாழக்கிழமை வவுணதீவு பிரதேச செயலகத்துக்;குட்பட்ட ஈச்சந்தீவில் நடைபெற்றது.
ஈச்சந்தீவு ஸ்ரீகண்ணகி அம்மன்ஆலய முன்றலில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின்போது பல்வேறு கிராமங்களில் உள்ள நாட்டார் பாடகர்கள் அழைத்துவரப்பட்டு கிராமிய பாடல்கள் இசைக்கப்பட்டன.
கிராம மக்களின் அன்றாட வாழ்வில் பிண்ணிப்பிணைந்துள்ள அருகி வரும் பாடல்கள் இங்கு பாடப்பட்டன.

7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025