S.Renuka / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 வயது சிறுவன் முன்ஜென்ம நினைவுகளை தெளிவாக நினைவு கூர்ந்து கூறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய முன்ஜென்மத்தைப் பற்றிய விவரங்களை அவன் தெளிவாகச் சொல்லியிருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் அந்தப் பகுதி மக்கள் கூட்டமாக திரண்டு வந்து சிறுவனை பார்க்கின்றனர். தற்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
மழலை பேச்சில் தொடங்கிய வினோத தகவல்கள்
லக்கிம்பூர் மாவட்டம் மைலானி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் - ராம்பெட்டி தம்பதியினருக்கு 2014 ஒகஸ்ட் 15ஆம் திகதி பிறந்த ஜீதன் என்ற சிறுவன், மூன்று வயதிலிருந்தே வித்தியாசமான விஷயங்களைப் பேசத் தொடங்கினான்.
தன் வீடு போலாப்பூர் கிராமத்தில் இருப்பதாகவும், தந்தையின் பெயர் விதேசி என்றும் அவன் அடிக்கடி கூறி அழுததாக பெற்றோர் தெரிவித்தனர். ஆரம்பத்தில் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், அவன் தொடர்ந்து அதையே கூறியதால் பெற்றோர் கவனம் செலுத்தினர்.
இதையடுத்து, சிறுவனை போலாப்பூர் கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விதேசி என்பவரை பார்த்தவுடன், "இவர்தான் என் அப்பா" என்று கூறி ஓடி அணைத்துக்கொண்டான். மேலும், விதேசியின் மனைவி வசந்தியையும் தன் அம்மாவாகக் கூறியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அவை வைக்கப்பட்ட இடங்களை சரியாகக் கூறியதும் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
தகவலின்படி, விதேசியின் மகன் திலீப் கடந்த 2012ஆம் ஆண்டு பெங்களூருவில் கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது.
அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து ஜீதன் பிறந்துள்ளான். இந்த விவரங்கள் ஒன்றோடொன்று பொருந்தியதால், மறுபிறவி குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது.
சிறுவன் கூறிய தகவல்கள் துல்லியமாக இருப்பதாக இரு குடும்பங்களும் கூறியுள்ள நிலையில், இந்த விசித்திர சம்பவம் பற்றி தெரிந்து கொள்ள அண்டை கிராமங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இது வேகமாக பரவி, பல்வேறு கருத்துகளையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .