Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 28 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கலைத்துறையின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவைகளை ஆற்றிய கலைஞர்களைப் பாராட்டி கெளரவிக்கும் கலாபூசணம் அரச விருது விழா 2019, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளை (29) பிற்பகல் 4 மணிக்கு, கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது விழா, 34ஆவது தடவையாக, நாளை இடம்பெறவுள்ளதுடன், அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் 200 பேர், இதன்போது விருது வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளனர்.
இசை, நடனம், இலக்கியம், கட்புலக் கலைகள், நாடகம், புகைப்படக் கலை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாட்டார்க் கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை ஆற்றியவர்கள், இதன்போது விருது வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளனர்.
சிரேஷ்ட கலைஞர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும், இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
20 minute ago
28 minute ago