Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
செயல் திறன் அரங்க இயக்கமும் யாழ்ப்பாண மாநகரசபையும் இணைந்து நடத்தும் நல்லூர் நாடகத் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வு, புதன்கிழமை (09) நல்லூர் குறுக்கு வீதியிலுள்ள நாடக மேடையில் நடைபெறவுள்ளது.
இதில் வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார பிரதம அதிதியாகக் கலந்துகொளள உள்ளார்.
செயல் திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நாடகத் திருவிழா – 2015 வெற்றிகரமாக அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்றுவருகின்றது. இந்த நாடக விழாவில் இருபதுக்கு மேற்பட்ட நாடகங்கள் மேடையேறியிருக்கின்றன. அதன் இறுதி நாளான புதன்கிழமை (09) இரண்டு சிறுவர் நாடகங்கள் உட்பட ஐந்து நாடகங்கள் மேடையேறுகின்றன.
இந்நாடக விழாவில் வடமாகாண ஆளுநர் கலந்துகொள்ளவுள்ளார். அனறைய தினம் தே.வோனந்தின் 'சிரிப்பு மூடை' சிறுவர் நாடகமும் முதியோர் பிரச்சினையைப் பேசும் 'ஏகாந்தம்' வேடமுக நாடகமும் பால் மற்றும் பால்நிலைசார் பிரச்னைகளைப் பேசும் 'வெண்மை எழில'; மோடிமை நாடகமும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த குழந்தை என்.சண்முகலிங்கத்தின் 'கூடிவிளையாடு பாப்பா' சிறுவர் நாடகமும் மேடையேறுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
2 hours ago
3 hours ago