2025 மே 02, வெள்ளிக்கிழமை

' மண் கமழும் மங்கல விழா 2012'

Kogilavani   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித்)


பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ' மண் கமழும் மங்கல விழா 2012' நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, கலைஞர்கள் கௌரவிப்பும், முகவரி நூல் வெளியீடும், இறுவட்டு வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் தவராஜா, பேராசிரியர் செல்வராசா, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர் ஆலய பிரதம குரு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஒன்றியத்தின் தலைவர் த.மேகராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கவிதை, இசை நாடகம், கூத்து, ஆன்மீகம், கிராமியக் கலை என பல் துறைகளைச் சேர்ந்த 14 பேர் கௌரவிக்கப்பட்டதுடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் தவராஜாவும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.





















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .