Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2012 ஜனவரி 31 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் முன்னணி சாத்ரிய நடன தாரகையும் சர்வதேச ரீதியில் பல விருதுகளை தனதாக்கிக் கொண்டவருமான கலைமாமணி ரமா வைத்தியநாதனின் பரதநாட்டிய நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பு பிஸப்ஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. எக்ஸ்பிரஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் முன்னணி கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
உலகின் பல பாகங்களிலும் தனது நடனத் திறமையினால் சபையினரை மெய்சிலிர்க்க வைத்த ரமா வைத்தியநாதன் இம்முறை தனது மகளுடன் ஒரே மேடையில் தோன்றியமை சிறப்பானதாகும். அதுமட்டுமல்லாமல் இலங்கையின் முன்னணி கலைஞரான ரவிபந்து வித்யாபத்தி அவர்களும் இந்நடன நிகழ்வில் கலந்து ரமா வைத்தியநாதனுடன் தனது திறமையை பறைசாற்றியமை இனிமையான அனுபவமாக அமைந்திருந்தது.
கலைமாமணி ரமா வைத்தியநாதன் தனது மகளுடன் நடனமாடுவதையும் நிகழ்வில் கலந்துகொண்ட எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் குழும உயரதிகாரிகளையும் அதிதிகளையும் படங்களில் காணலாம். (படங்கள்: குசான் பத்திராஜ)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
01 May 2025
01 May 2025