2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தெய்வீக கானம்' இறுவெட்டு திருமலையில் வெளியீடு

Super User   / 2012 ஏப்ரல் 02 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


பண்டிதரான சைவப்புலவர் பொன். சுகந்தன் யாத்த ஐந்து திருத்தலங்கள் மீதான பாடல்களை கொண்ட 'தெய்வீக கானம்' என்ற இறுவெட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியீடப்பட்டது.

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஏழாவது நாள் திருவிழாவின் நிறைவாக நடைபெற்ற நிகழ்வின் போது இந்த இறுவெட்டு வெளியீடப்பட்டது.

ஆலயத்தின் ஆதினகர்த்தாவும் பிரதம குருவுமான வேதாகமமாமணி சிவ ஸ்ரீ சோ.இரவிச்சந்திர குருக்களினால் இந்த இறுவெட்டு வெளியிடப்பட்டது. இறுவட்டின் முதலாவது பிரதியை திருகோணமலை நகர சபையின் தலைவர் க.செல்வராசா பிரதம குருவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில், புலோலி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம், கதிர்காமம் கந்தன் ஆலயம் மற்றும் மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயம் ஆகியவற்றின் மீது பாடிய பாடல்களே இந்த இறுவெட்டில் இடம்பெற்றுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .