2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இடரும் உறவும் சிறுகதை தொகுதி அறிமுக நிகழ்வு

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

மூத்த சிறுகதை எழுத்தாளரான வே.தில்லைநாதனின் இடரும் உறவும் என்ற சிறுகதை தொகுதியின் அறிமுக நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை நகர மண்டபத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் மொழி, தொடர்பாடல் புலம் பிரிவின் சிரேஷ்ட ஆலோசகரான அருட்தந்தை கலாநிதி சி.பி.இராஜேந்திரம் தலைமையில் நடைபெற்றது.

சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ராஜகுலேந்திரா, கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் வளாகத்தின் மொழி, தொடர்பாடல் புலம் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரான எஸ்.ரகுராம், மூத்த சிறுகதை எழுத்தாளர் நந்தினி சேவியர் உட்டபட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

திருகோணமலை கிரியேஷன்ஸ் அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X