2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கவிஞர் சோலைக்கிளியின் இரண்டு நூல்கள் வெளியீடு

Super User   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கவிஞர் சோலைக்கிளியின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

'அவணம்' எனும் கவிதை தொகுதி மற்றும் 'பொன்னாலே புழுதி பறந்த பூமி' எனும் பத்திகளின் தொகுப்பு ஆகிய நூல்களே இந்த விழாவில் வெளியிடப்பட்டன.

ஸ்ரீலங்கா முலஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலை அதிதியாக கலந்துகொண்ட இவ்விழாவில் எழுத்தாளர்களான உமா வரதராஜன், எஸ்.எல்.எம்.ஹனீபா, செ.யோகராஜன்,  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை விரிவுரையாளர் ரகுவரன், கவிஞர் அன்புடீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

நூல்களின் ஆய்வுரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் ரமீஸ் அப்துல்லா நிகழ்த்தினார்.

544 பக்களில் 271 கவிதைகளை உள்ளடக்கியதாக 'அவணம்' கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இந்நூலினை இந்தியாவின் 'அடையாளம்' பதிப்பகம் வெளிக்கொணர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கவிதைத் தொகுதியில் சோலைக்கிளியின் முன்னைய கவிதை நூல்களான நானும் ஒரு பூனை, எட்டாவது நரகம், காகம் கலைத்த கனவு, ஆணிவேர் அறுந்த நான், பாம்பு நரம்பு மனிதன், பனியில் மொழி எழுதி, என்ன செப்பங்கா நீ மற்றும் வாத்து ஆகிய நூல்களிலுள்ள கவிதைகளும் புதிய பல கவிதைகளும் உள்ளடங்கியுள்ளன.

மற்றைய நூலான 'பொன்னாலே புழுதி பறந்த பூமி'யில் கவிஞர் - பத்திரிகையில் தொடராக எழுதிவந்த இலக்கிய பத்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலினை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .