2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வித்துவான் சா.இ.கமலநாதனின் மறைவுக்கு மட்டு.மாநகர சபையில் அனுதாபப்பிரேரணை நிறைவேற்றம்

Kogilavani   / 2012 மே 02 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதுபெரும் தமிழ் அறிஞரான இலக்கிய கலாநிதி வித்துவான சா.இ.வித்துவானின் கடந்த வாரம் மட்டக்களப்பில் மரணமானார்.

அவரின் தமிழ் இலக்கிய மற்றும் சமூகப் பணிகளைக் கௌரவிக்கும் முகமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகர சபை பொதுக் கூட்டத்தில் அனுதாபப் பிரேரணை ஒன்று ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் டாக்டர் ஆர்.ஏ.அகுஸ்ரீனால் முன்மொழியப்பட்ட இப் பிரேரணை மாநகர சபையின் அனுமதியுடன் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், அதன் பிரதி வித்துவான் கமலநாதனின் குடும்பத்தாருக்கு மாநகர சபையினால் அனுப்பி வைக்கப்பட்டது.

வித்துவான் கமலநாதன், 1963- 1972 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாநகர சபை நூலகத்தின் ஆலோசகர் சபையின் உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .