2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மகேசாஞ்சலி நர்தனாலயம் வழங்கிய நடன நிகழ்வுகள்

Kogilavani   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

திருக்கோவில் மகேசாஞ்சலி நர்தனாலயம் வழங்கிய நடன நிகழ்வுகளில் இறுதிநாள் வைபவம் நேற்று முன்தினம் திருக்கோவில் மத்திய மகாவித்தியாலய கலை அரங்கில் இடம்பெற்றது.

ஆசிரியை தேவமலர் தங்கமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.தௌபீக், சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் சுலோசனாதேவி இராஜேந்திரன், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எஸ்.குணபால, ஓய்வு பெற்ற அழகியல் கல்விப் பணிப்பாளர் இராஜகுமாரி சிதம்பரம் ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் ரீ.திலகவதி கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .