2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கலாசார விழாவும் 'வாழைமடல்' இறுவெட்டு வெளியீடும்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசார விழாவும் 'வாழைமடல்' இறுவெட்டு வெளியீடும் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எஸ்.நிஹாரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அத்துடன் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.சுபைதீன், உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், பிரதேச எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டனர்.

கலாசாரப் பேரவையால் முதன்முதலாக இம்முறை பிரதேசத்தின் தகவல்களைத் தாங்கிய 'வாழைமடல்' என்னும் இறுவெட்டும் இதன்போது வெளியிடப்பட்டதுடன், கலாசார நிகழ்வை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன், மூத்த கலைஞரும் பிரதேசத்திலிருந்து முதலாவதாக கலாபூஷனம் விருது பெற்ற எஸ்.ஏ.மீராசாஹிப் கௌரவிக்கப்பட்டார்.



  Comments - 0

  • musdeen Thursday, 10 January 2013 06:48 AM

    வாழ்த்துக்கள் என்றும்...
    அன்புடன்
    முஸ்டீன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .