2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றை சகல பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கும் கலாசார அமைச்சு  அனுப்பி வைத்துள்ளது.

அச் சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த காலங்களில் கலாசார திணைக்களம் இத்தகைய எழுத்தாளர்களிடம் இருந்து நூல்களை கொள்வனவு செய்தது.

இதன்போது, பல எழுத்தாளர்களுடைய நூலகள் கொள்வனவு செய்யப்படக் கூடிய முறையில் தகவல்கள் கிடைக்கப் பெறாமையால் கொள்வனவு செய்ய முடியாத நிலமை ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது பிரதேச செயலாளர் உதவி அரசாங்க அதிபர் பிரிவு மட்டத்தில் உள்ள எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்கள் மூலம் உரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதேச செயலாளர் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் உள்ள எழுத்தாளர்கள், அவர்கள் பிரசுரித்த நூல்களின் ஒரு பிரதியை குறிப்பி;ட்ட விண்ணப்பத்துடன் கலாசார தினைக்களத்திற்கு அனுப்பி வைக்கும் படி கோரப்பட்டுள்ளனர்.

எழுத்தாளர் ஒருவர் பல நூல்களை எழுதி இருந்தால் ஒவ்வொரு நூலுடனும் ஒவ்வொரு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுப்பப்படும் நூல்கள்  கொள்வனவு செய்யப்படும் வருடத்திலோ அன்றி கடந்தாண்டோ வெளியிடப்பட்டதாக இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களையும் விண்ணப்பங்களையும் பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் கடமையாற்றும் கலாசார அலுவலர்கள் மற்றும் கலாசார அபிவிருத்தி உதவியாளர்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .