2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அரச இலக்கிய விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கலாசார திணைக்களத்தினால் வருடம் தோறும் வழங்கப்படுகின்ற அரச இலக்கிய விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்தார்.

இதனடிப்படையில் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுயநாவல் இலக்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு நாவல் இலக்கிய நூல்கள், சுய சிறுகதை இலக்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கிய நூல்கள், சுய நானாவித இலக்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு நானாவித இலக்கிய நூல்கள், சுய நாடக இலக்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு இலக்கிய நூல்கள், இளையோர் நாவல்கள், சிறுவர் இலக்கியம், கவிதை, கவிதை வடிவ இலக்கியம், அறிவியல் புனைக்கதை போன்ற ஆக்க நூல்கள் விண்ணப்பத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

பிரதேச செயலகங்களில் கலாசார உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நூலின் 3 பிரதிகளுடன் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .