2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'இலங்கை பல்கலைகழக முறைமை முகங்கொடுத்துள்ள சிக்கல்களும் சவால்களும்'

Menaka Mookandi   / 2013 ஜூன் 23 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான், தேவ அச்சுதன்


தகைமைசார் பேராசிரியர் டபிள்யூ.டீ.லக்ஷ்மன எழுதிய 'இலங்கை அரசுப் பல்கலை கழக முறைமை முகங்கொடுத்துள்ள சிக்கல்களும் சவால்களும்' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று காலை மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் கிழக்கு பல்கலை கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை திறந்த பல்கலைகழக விரிவுரையாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நூல் பற்றிய ஆய்வுரையை நிகழ்த்தினார். கல்வியில் மறுமலர்ச்சி எனும் தலைப்பில் திறந்த பல்கலைகழகத்தைச் சேர்ந்த கலாநிதி திலீப விதாரண நிகழ்த்தினார்.

களனி பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திம நிஸ்ஸங்க கிழக்கு பல்கலைகழக முதுநிலை பேராசிரியர் செ.யோகராசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதி அல்போன்ஸ் மேரி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். கல்வியாளர் முருகு.தயானந்தா உட்பட பலர் சிறப்பு பிரதிகளைப் பெற்றனர். பல கல்வியாளர்களும் பல்கலை கழகங்களின் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .