2025 நவம்பர் 22, சனிக்கிழமை

'இன்னிசைப் பொழுது' இசை நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 30 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கீத பாட ஆசிரியர்கள் கலந்துகொண்ட 'இன்னிசைப் பொழுது' இசை நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் வடமாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் கலந்துகொண்டார்.

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சங்கீத பாட ஆசிரியர்களாக கடமையாற்றி வரும் ஆசிரியர்கள் இந்த 'இன்னிசைப் பொழுது' இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் இராதகிருஸ்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X