2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புகைப்படக் கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


சி. சிவகருணாகரன்


வ.வசந்தரூபனின் '100 கிளிக்' என்ற தொனிபொருளில்  புகைப்படக் கண்காட்சி ஒன்று இன்று காலை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது.

கரைச்சிப் பிரதேச கலாசார உத்தியோகத்தர் கு.ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் அ.பங்கையற்செல்வன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் எடுக்கப்பட்ட கலாசாரம் மற்றும் இயற்கைச் சூழல் சார்ந்த ஒளிப்படங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

'பாடசாலை மாணவர்களிடையே ஒளிப்படம் மற்றும் கலைத்திட்டம் தொடர்பான அறிதலை விரிவாக்கும் வகையில் இந்த ஒளிப்படக் காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது' என அரசாங்க அதிபர் ருபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இக் காட்சியை முன்னிட்டு ஒளிப்படம் பற்றிய கருத்தரங்கும் நடைபெறுகிறது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .