2025 மே 09, வெள்ளிக்கிழமை

'இராமதூதுவன்' இதிகாசக்கூத்து சதங்கையணி விழா

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, திருப்பழுகாமம் 'பாஞ்சாலி கலைக்கழகம்'  'இராமதூதுவன்' என்னும் இதிகாசக்குறுங் கூத்தினை திருப்பழுகாமம் வன்னிநகர் பிரிவின் இலக்கியமணி, கவிஞர் க.தணிகாசலத்தின் முற்றத்தில் சதங்கையணி விழாவாக பாரம்பரிய கூத்துக்கலை மரபின்படி கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றியது.

இதன் நிகழ்வாக இறைவழிபாடு நிறைவேற்றப்பட்டு மறைந்த கலைஞர், மட்டு. மரபுக்கலைக் காவலர்களான அமரர் அதிபர் பொன்.தங்கராசா, அமரர் அதிபர் சி.முருகேசு, அமரர் அதிபர் செ.வினாயகமூர்த்தி (வெற்றிவேல்), அமரர் க.சிவஞ்ஞானம், அமரர் ஆசிரியர் ஆ.சுபராஜ், அமரர் பொன்.சுப்பிரமணியம், அமரர் கரகக்குரிசில் வடிவேல் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச கலாசார உத்தியோகத்தர் ஆ.பிரபாகரன் கௌரவ அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக நீர்ப்பாசனத் திணைக்கள வேலைகள் மேற்பார்வையாளரும் மாவேற்குடா பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் வ.அரசரெத்தினம், மட்டு. தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய அதிபரும் மூத்த கலைஞருமான வே.யோகேஸ்வரன்  கலந்து கொண்டனர்.

பாஞ்சாலி கலைக்கழக இளம் தலைவர் த.இலட்சுமிகாந்தனின்; தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கழக பொருளாளர் முன்னாள் ஆசிரியர், பிரபல வர்த்தகர் க.பேரின்பராசா அனுசரணை வழங்கினார்.

மட்டு. மரபுக்கலைக் காவலன் கலைச்சுடர் கோயிலூர் தணிகாவின் நெறிப்படுத்தலுடன் சதங்கையணி விழாக்கண்ட இக்கூத்துக்கு மத்தள இசையை பிரபல அண்ணாவியார் க.பாக்கியராசா  வழங்கினார்.

மட்டு. பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய அதிபரும் மூத்த கலைஞருமான சு.உதயகுமார் ஸ்ரீராமராகவும் கழகச் செயலாளர் அ.பதிகரன் இலக்குமணனாகவும் மூத்த கலைஞர் பிரபல வர்த்தகர் க.கனகசபை அனுமானாகவும் க.வேந்தன் சீதாபிராட்டியாகவும் நண்பர்கள் அமைப்புக் தலைவர் யோ.ரெனிஸ்காந்தன் திரிசடையாகவும் ஆசிரியர் திரு.த.சேரலாதன் இராவணனாகவும் உடற்கல்வி ஆசிரியர் மூத்த கலைஞர் பொன்.த.திவ்வியராசா இந்திரஜித்தாகவும் பாத்திரமேற்று நடித்தனர்.

தமிழின் இனிமை ததும்பும் இக்கூத்தினை மட்டு. பட்டிருப்பு மகாவித்தியாலய முன்னாள் தழிழ்த்துறை ஆசிரியரும் முன்னாள் தழிழரசுக் கட்சி வேட்பாளரும் சிறந்த எழுத்தாளரும் கலைஞருமான கே.பரராசசிங்கத்தின்; படைப்பே இராமதூதுவன் கூத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X