2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நவீன காலத்தில் பாரம்பரிய அரங்கு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை மற்றும் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நடன, நாடக துறையின் ஏற்பாட்டில் 'நவீன காலத்தில் பாரம்பரிய அரங்கு' என்னும் தலைப்பிலான கருத்தமர்வு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீட தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,  தஞ்சை பல்கலைக்கழக நாடகத்துறை தலைவர் பேராசிரியர் மு.ராமசாமி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பிரேம்குமார், கல்வியியற்கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய அரங்கின் செயற்பாடுகள் மற்றும் தற்போதைய நவீனத்துவ காலத்தில் பாரம்பரிய ஆற்றுகையின் நிலை தொடர்பில் ஆய்வுசெய்யும் வகையில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது நவீன ஆற்றுகை காலத்தில் பாரம்பரிய அரங்க ஆற்றுகையின் நிலை மற்றும் அவற்றினை எவ்வாறு இளம் தலைமுறையினருக்கு கொண்டுசெல்லலாம் என்பது தொடர்பில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

அத்துடன் பாரம்பரிய அரங்க ஆற்றுகை செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தும் சமூக காரணிகள் மற்றும் புறசெயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .