2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிழக்கு பல்கலையின் கலாசார நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன்


யுத்தத்திற்குப் பின்னரான மீள்ச்சியில் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் தலைப்பில் நடைபெற்றுவரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாட்டின் கலாசார நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றன.

மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்ற இந்;த கலாசார நிகழ்வுகளை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையும் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இசைக் கச்சேரிகளும் பாரம்பரியக் கூத்துக்களும் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் அதிதிகளாக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, மாநாட்டின் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டுள்ள பங்காளதேஷன் டாக்கா பல்கலைக்கழக அரங்கியல்துறை பேராசிரியர் ஐசயத் ஜமில் அகமட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .