2025 மே 09, வெள்ளிக்கிழமை

யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் பாடலுக்கு அரச விருது

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்களினால் உருவாக்கப்பட்ட 'உறவு தேடும்......' பாடலுக்கு சிறந்த பாடல் வரிக்கான விருது கிடைத்துள்ளது.
அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற அரச இசை விருது வழங்கும் விழாவில் வைத்து இவ்விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை கல்லூரியின் முதல்வர் சபையின் செயலாளர் தனபாலசிங்கம் மதீசன் பெற்றுக்கொண்டார். இலங்கை முழுவதிலும் இருந்து 26 பாடல்கள் இவ்விருதுக்காக போட்டியிட்டு, இறுதியில் யாழ்ப்பாணம் இந்து மாணவர்களின் உறவு தேடும்... பாடலுக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

இப்பாடலுக்கான கவி வரிகளை ல.நிசாந்தன் எழுதியதுடன், த.விஸ்ணுகரன், ஜெகனி முரளிகிருஷ்ணா ஆகியோர் இப்பாடலைப் பாடியிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X