2025 மே 09, வெள்ளிக்கிழமை

ரஸ்மின் எழுதிய போர்க்கால சிங்கள இலக்கியங்கள்: ஒரு பன்மைத்துவ ஆய்வு நூல் வெளியீடும் ஆய்வரங்கும்

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சீ.ரஸ்மின் எழுதிய போர்க்கால சிங்கள இலக்கியங்கள்: ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983 - 2007) எனும் நூல் வெளியீடும் அதனை மையமாகக் கொண்டு மீளிணக்கச் செயற்பாட்டில் சிங்கள இலக்கியங்களின் வகிபங்கு பற்றிய உரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இல. 310, டி.ஆர். விஜேவர்தன மாவத்த, கொழும்பு 10 எனும் முகவரியில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இவ்விரு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

பேராசரியர் எம்.எஸ்.எம்.அனஸ் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேச நாணயக்கார பிரதம அதிதியாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத் தழிழ்துறைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதநிலை விரிவுரையாளர் பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தவுள்ளனர்.

ருஹூன பல்கலைக்கழகத்தின் சிங்களத்துறை விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க சிங்களத்தில் நூலறிமுகத்தையும் கே.எஸ்.சிவகுமாரன் ஆங்கிலத்தில் நூலறிமுகத்தினையும் மேற்கொள்ளவுள்ளனர்.

போர்க்கால சிங்கள இலக்கியங்கள்: ஒரு பன்மைத்துவ ஆய்வு எனும் இந்த நூல் தமிழ்பேசும் சிறுபான்மையினரின் இருத்தலுக்கான போராட்டம் சிங்களப் படைப்புக்களில் இடம்பெற்றுள்ள விதம் பற்றி ஆய்வு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

30 வருட துயரங்கள், இன்னல்கள், காயங்கள், அழிவுகள் என்பனவற்றை விதைத்து பிரிவினையை அறுவடை செய்த யுத்தத்தின் கோரமுகம் சிங்கள இலக்கியங்கள் எவ்வாறு பதியப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துவதாக இந்த நூல் உள்ளது. இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இந்த நூலை வெளியிட்டிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X